வளர்ச்சிப் பாதையில் இந்திய பொருளாதாரம்: ரஷ்ய அதிபர் புடின் பாராட்டு Putin Praises Modi|
#Putin| #PMModi| #IndiaRussiaMeeting| #MakeinIndia| Russia| அரசு முறை பயணமாக இந்தியா வந்த ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின், டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இரு நாட்டு உறவு, தொழில், வர்த்தம், முதலீடு, சுற்றுலா மேம்பாடு குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசித்தனர். பின், இரு நாடுகள் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ரஷ்யாவில் புதிதாக இந்திய துாதரங்கள் திறப்பு, ரஷ்ய சுற்றுலா பயணிகளுக்கு இலவச இ - விசா வழங்குதல், இரு நாட்டு இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு உடன்படிக்கை குறித்து பிரதமர் மோடி அறிவித்தார். தொடர்ந்து ரஷ்ய அதிபர் புடின் பேசினார். எனக்கு ரஷ்ய பிரதிநிதிகளுக்கும் சிறப்பான வரவேற்பு அளித்த இந்திய அரசுக்கு நன்றி. பிரதமர் மோடியை சந்தித்ததில் மகிழ்ச்சி. இதன் மூலம் இரு நாட்டு உறவு மேலும் வலுப்படும். எரிசக்தி, காஸ் சப்ளை பற்றிய உடன்படிக்கைக்காக மட்டும் இந்த சந்திப்பு நிகழவில்லை. அதையும் தாண்டி பல முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசித்தோம். மேக் இன் இந்தியா திட்டம் மிகச் சிறப்பானது. இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது. உலகில் வேகமான பொருளாதார வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.