பிரதமர் மோடி வருகையால் சைப்ரஸ் வாழ் இந்தியர்கள் உற்சாகம் Modi at Cuprus| Indian Diaspora welcomed M
ைப்ரஸ் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடியை ஏர்போர்ட்டில் அந்நாட்டு அதிபர் நிகோஸ் உள்ளிட்டோர் வரவேற்றனர். லிமாசோலில் பிரதமர் மோடி தங்கும் ஓட்டலில் குழுமிய இந்தியர்கள், அவரை உற்சாகத்துடன் வரவேற்றனர். சிலர் மோடிக்காக சிறப்பு கவிதைகளை எழுதி வந்திருந்தனர். சிறுவன் ஒருவன் தன் தலையில் மோடியின் பெயரை சிகை அலங்காரம் செய்திருந்தான். பலரும் தங்கள் கைகளில் பலுான்களுடன் பிரதமர் மோடியை வரவேற்றனர். சைப்ரஸ் வாழ் இந்தியர்கள் கூறும்போது, மோடியின் வருகை மிகுந்த உற்சாகம் அளிக்கிறது. இந்தியாவில் கூட அவரை இவ்வளவு எளிதாக நேரில் பார்க்க முடியாது. சைப்ரஸில் அது நிகழ்வது நாங்கள் செய்த பாக்கியம். உலகையே கட்டி ஆளும் மிகச் சிறந்த ஆளுமையை நேரில் பார்ப்பதை விட வேறென்ன பாக்கியம் எங்களுக்கு வேண்டும் எனக்கூறினார்.