உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மோடி ரோட் ஷோவில் உருக வைத்த சம்பவம் | PM Modi-Pedro Sanchez vadodara road show | Dia Gosai gift

மோடி ரோட் ஷோவில் உருக வைத்த சம்பவம் | PM Modi-Pedro Sanchez vadodara road show | Dia Gosai gift

இந்தியாவின் டாடா மற்றும் ஐரோப்பிய நிறுவனமான ஏர் பஸ் இணைந்து போர் விமானங்களை தயாரித்து தர உள்ளன. இதற்கான தொழிற்கூடம் குஜராத் மாநிலம் வதோதராவில் (vadodara) இன்று துவங்கப்பட்டது. அதை பிரதமர் மோடி, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் Pedro Sanchez இணைந்து திறந்து வைத்தனர். முன்னதாக மோடியும், ஸ்பெயின் பிரதமரும் இரண்டரை கிலோ மீட்டர் தூர ரோட் ஷோவில் பங்கேற்றனர். திறந்த வாகனத்தில் வந்த 2 தலைவர்களும் ரோட்டின் இருபுறமும் கூடி இருந்த மக்களை பார்த்து புன்னகையுடன் கையசைத்தனர். அவர்களுக்கு குஜராத் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கூட்டத்தில் இருந்த மாற்றுத்திறனாளி சிறுமி, மோடி, பெட்ரோ சான்செஸ் படங்களை ஓவியமாக வரைந்து வைத்திருந்தார். அதை பார்த்ததும் மோடி நெகிழ்ந்து போனார். அந்த ஓவியங்களை பெற்ற பாதுகாவலர்கள் மோடியிடம் வழங்கினர். மெய்சிலிர்த்த மோடி உடனே வாகனத்தில் இருந்து கீழே இறங்கினார். ஸ்பெயின் பிரதமரும் அவருடன் இறங்கி சென்றார். 2 தலைவர்களும் மாற்றுத்திறனாளி சிறுமிக்கு கைகொடுத்து பாராட்டினர். அவருக்கு ஆசியும் வழங்கினர். breath 2 பிரதமர்களிடமும் வாழ்த்து பெற்ற சிறுமி பெயர் தியா கோசாய் என்பது தெரியவந்தது. உற்சாகத்தில் மிதந்த சிறுமி, நெகிழ்ச்சி தருணத்தை விவரித்தார். பிரதமர் மோடி வதோதரா வருகிறார் என்பதை அறிந்ததும் மகிழ்ச்சி அடைந்தேன். அவருடன் ஸ்பெயின் பிரதமர் வருவதும் தெரிந்தது. அவர்களுக்கு ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். 2 தலைவர்களின் ஓவியத்தையும் வரைந்து எடுத்து வந்தேன். ஓவியத்தை பார்த்ததும் 2 தலைவர்களும் கைகுலுக்கி பாராட்டினர். பின்னர் ஸ்பெயின் பிரதமரிடம் என்னை மோடி அறிமுகம் செய்தார். என் வாழ்நாளில் மறக்க முடியாத மகிழ்ச்சியான நாள் இதுதான் என்று சிறுமி சொன்னாள்.

அக் 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி