மோடி கனவு நனவானது: அமித் ஷா பெருமிதம் | CISF Women Wing | PM Modi | Amit Shah
சிஐஎஸ்எப்(CISF) எனப்படும் மத்திய தொழில் பாதுகாப்பு படை இந்தியாவின் ஆயுத படைகளில் ஒன்று. இந்தியாவின் முக்கிய தொழில் நிலையங்களை பாதுகாக்க அமைக்கப்பட்ட துணை இராணுவப்படையாகும். 1969ல் 2800 வீரர்களுடன் இந்த படை பிரிவு உருவாக்கப்பட்டது. முக்கியமான அரசு மற்றும் தொழில் துறை நிறுவனங்களை பாதுகாக்கும் பணியை செய்கிறது. குறிப்பாக அணு உலைகள், விண்வெளி ஆய்வகங்கள், துறைமுகங்கள், ஏர்போர்ட், பாதுகாப்பு தேவைப்படும் அரசு கட்டிடங்கள், புராதான சின்னங்கள் போன்றவைகளை பாதுகாக்கிறது. தலைமை செயலகம் டெல்லியில் உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. இரண்டு லட்சம் வீரர்கள் இருக்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் எண்ணிக்கையில் 7 சதவீதம் பெண்கள் உள்ளனர். முதல்முறையாக மத்திய தொழில் பாதுகாப்பு படையில் பெண்கள் மட்டுமே அடங்கிய பட்டாலியன் படைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இனி ஏர்போர்ட், மெட்ரோ ரயில் நிலையங்களை பாதுகாக்கும் பொறுப்பை புதிதாக உருவாக்கப்படும் பெண்கள் படை ஏற்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.