உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இனி சிபிஐ தாமாக விசாரணை நடத்த முடியாது muda| karnataka| siddaramaiah

இனி சிபிஐ தாமாக விசாரணை நடத்த முடியாது muda| karnataka| siddaramaiah

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முடா எனப்படும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் நடந்த முறைகேடு புகாரில் முதல்வர் சிக்கியுள்ளார். இது பற்றி விசாரிக்க அனுமதி அளித்த கவர்னருக்கு எதிராக, காங்கிரசார் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனிடையே, கர்நாடக அமைச்சரவை கூட்டம், முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு பற்றி சட்டத் துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் கூறினார். கர்நாடகாவில், சி.பி.ஐ., அதிகாரிகள் தாமாகவே நேரடியாக விசாரணை நடத்த அனுமதி இருந்தது. இந்த அனுமதியை திரும்ப பெறுவதற்கு, அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

செப் 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை