உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பிராணிகள் வளர்க்க கட்டணம் மாநகராட்சியில் தீர்மானம்

பிராணிகள் வளர்க்க கட்டணம் மாநகராட்சியில் தீர்மானம்

மதுரை மாநகராட்சியில் வீடுகளில் பிராணிகள் வளர்ப்பதற்கு கட்டணம் விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. மாடுகள் வளர்க்க 500 ரூபாய், குதிரைக்கு 750, ஆடுகளுக்கு 150, பன்றிகள் வளர்க்க 500 வசூலிக்கப்படும். செல்ல பிராணிகளாக வளர்க்கப்படும், நாய், பூனைகளுக்கு 750 ரூபாய், பறவை, விலங்குகளுக்கு 150 ரூபாய் மாநகராட்சிக்கு கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டணம் தலா ஒரு பிராணிக்கானது. இதே போல் மற்ற பிராணிகள் வளர்க்க உரிமைத்தொகை கட்ட வேண்டும். மதுரையில் ஏற்கனவே செல்லப்பிராணிகள் வளர்க்க தலா 10 ரூபாய் வரி வசூலிக்கப்படுகிறது. தற்போது கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பிப் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ