வக்ப் போராட்டத்தில் வெடித்த கலவரம்-பதற்றம் | Murshidabad muslim protest | waqf | Malviya vs Mamata
எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு நடுவே பார்லிமென்ட்டின் இரு சபையிலும் நீண்ட விவாதத்துக்கு பிறகு வக்ப் திருத்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது. பார்லிமென்ட் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, ஜனாதிபதி திரவுபதி முர்முவும் வக்ப் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார். இதை தொடர்ந்து மசோதா சட்டமானது. இன்று அதிகாரப்பூர்வமாக வக்ப் சட்டம் அமலுக்கும் வந்து விட்டது. இந்த நிலையில் வக்ப் சட்டத்தை எதிர்த்து மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தின் ஜாங்கிபூரில் முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊர்வலமாக வந்த போராட்டக்காரர்கள் போக்குவரத்து அதிகம் காணப்படும் முக்கிய சாலை ஒன்றை மறிக்க முயற்சி செய்தனர். ஏற்கனவே பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு இருந்த போலீசார், போராட்டக்காரர்களை மறியல் செய்ய விடாமல் தடுத்தனர்.