முத்தமிழ் முருகன் மாநாடு இனிதே நிறைவு! | Muthamizh murugan manadu | Palani | Murugan
முருக பக்தர்களை மகிழ்வித்த முத்தமிழ் முருகன் மாநாடு! பழநியில் இரு நாட்கள் நடந்த முத்தமிழ் முருகன் மாநாடு இனிதே நிறைவடைந்தது. இரண்டாவது நாளில் அமைச்சர் சக்கரபாணி தொடக்க உரையாற்றினார். விழா மலரை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் வெளியிட கவுமார மட ஆதினம் குமரகுருபர சுவாமிகள் பெற்றுக் கொண்டார். பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இரவு 7 மணிக்கு மாநாடு நிறைவு விழா நடந்தது. உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் அடியார்கள், சமய சொற்பொழிவாளர்கள், திருப்பணி மேற்கொண்டோர், ஆன்மிகம், இலக்கிய படைப்பாளர்களை சிறப்பிக்கும் வகையில் 16 பேருக்கு விருது வழங்கினார். முத்தமிழ் முருகன் மாநாடு நினைவாகப் பழநியில் வேல் நிறுவுதல், பழநி கோயிலுக்கு தைப்பூசம், பங்குனி உத்திர திருவிழாக்காலங்களில் பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கான அன்னதானம் திட்டத்தை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பக்தர்களின் முருகா கோஷங்களுடன் மாநாடு நிறைவுபெற்றது.