ரயிலில் இருந்து இழுத்துச்சென்று நாக்பூர் இளைஞர் வெட்டி சாய்ப்பு Nagpur Youth attacked|Tiruttani
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரயில் நிலையம் அருகில் ரயில்வே குடியிருப்பு உள்ளது. இப்பகுதியில் வடமாநில இளைஞர் ஒருவர் நேற்று மாலை அரிவாளால் வெட்டப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் விரைந்து சென்றனர். இளைஞரின் உடலில் 20 இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தன. ஆபத்தான நிலையில் இருந்த இளைஞரை போலீசார் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர் . அந்த வாலிபர் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த சூரஜ் என்பது தெரியவந்தது. போலீஸ் துரித கதியில் விசாரணையை துவங்கினர். அப்போது பகீர் தகவல்கள் வெளிவந்தன. சூரஜ் சென்னை மற்றும் புறநகர்களில் கிடைக்கும் கூலி வேலையை செய்து காலத்தை ஓட்டியிருக்கிறார். அவருக்கென யாரும் இங்கு இல்லை. சென்னை சென்ட்ரலில் இருந்து திருத்தணி செல்லும் மின்சார ரயிலில் நேற்று மாலை பயணம் செய்துள்ளார்.