உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பழனிசாமியிடம் பேசியதும் பாஜ தலைவர் டில்லி பறந்த பின்னணி Nainar Nagendran|Annamalai | EPS Amit Shah

பழனிசாமியிடம் பேசியதும் பாஜ தலைவர் டில்லி பறந்த பின்னணி Nainar Nagendran|Annamalai | EPS Amit Shah

அதிமுக, பாஜ கூட்டணியில் அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகள் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. அதிமுக, பாஜ இடையே கடந்த ஏப்ரல் மாதம் மீண்டும் கூட்டணி உறுதியானது. பரபரப்பான சம்பவங்களுக்கு பின் டில்லி சென்ற பழனிசாமி, 20 நிமிடம் தனியாக அமித்ஷாவிடம் பேசினார். பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க முடியாது என்று அமித்ஷாவிடம் திட்டவட்டமாக பழனிசாமி கூறியதாக தகவல் வெளியானது. பரபரப்பான சூழலில் நயினார் நாகேந்திரன், பாஜ மேலிட பார்வையாளர் அரவிந்த் மேனன், மாநில துணை தலைவர் கேபி ராமலிங்கம் ஆகியோர் நேற்று பழனிசாமியை சந்தித்து பேசினர். பின்னர் பேட்டி அளித்த நாகேந்திரன், இது மரியாதை நிமித்தான சந்திப்பு தான்; அரசியல் சந்திப்பு அல்ல என்றார். இதே நேரத்தில் தமிழக முன்னாள் பாஜ தலைவர் அண்ணாமலையும் டிடிவி தினகரனை சந்தித்து பேசினார். மீண்டும் கூட்டணிக்கு வர வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்ததாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து நயினார் நாகேந்திரன் டில்லி புறப்பட்டு சென்றதால் பரபரப்பு எகிறி விட்டது. அமித்ஷாவிடம் கூட்டணி மற்றும் அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான முக்கிய பேச்சும் நடத்த உள்ளார். அப்போது பழனிசாமியிடம் நடந்த பேச்சு வார்த்தையின் போது அவர் என்னவெல்லாம் சொன்னார் என்பதை அமித்ஷாவிடம் எடுத்து சொல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பின் முடிவில் பாஜ முக்கிய முடிவு எடுக்கும் என்று கூறப்படுகிறது.

செப் 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை