உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மகனை அனுப்பி கவுன்சிலர் மாமூல் வசூலித்ததால் அடிதடி

மகனை அனுப்பி கவுன்சிலர் மாமூல் வசூலித்ததால் அடிதடி

நாமக்கல், ராசிபுரம் அடுத்த கோனேரிப்பட்டியை சேர்ந்த ராஜா, புதிய பேருந்து நிலையம் அருகே அனுமதி பெற்று பார் நடத்தி வருகிறார். ராசிபுரம் 24வது வார்டு உறுப்பினர் கலைமணியின் மகன் லோக சரவணன், பார் உரிமையாளர் ராஜாவிடம் அடிக்கடி மாமூல் கேட்டுள்ளார். தராததால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இது பற்றி, திமுக கவுன்சிலர் கலைமணி வீட்டுக்கு சென்று அவரிடம் பார் உரிமையாளர் ராஜா கூறியிருக்கிறார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உண்டானது. ஒருவரையொருவர் தாக்கி கொண்டுள்ளனர். காயமடைந்த பார் உரிமையாளர் ராஜா உதவியாளர்கள் 2 பேர் ராசிபுரம் மருத்துவமனையில் அட்மிட் ஆகினர். கவுன்சிலர் கலைமணி அவரது இன்னொரு மகன் ஸ்ரீராம் ஆகியோர் நாமக்கல் மருத்துவமனையில் அட்மிட் ஆகினர். கவுன்சிலரின் மகன் லோக சரவணன் ராசிபுரம் மருத்துவனைக்குள் புகுந்து பார் உரிமையாளர் உள்ளிட்டோரை தாக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கொடுத்த புகாரையடுத்து போலீசார் விசாரிக்கின்றனர்.

பிப் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ