வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அச்சப்பட வைக்கிறது
அரியமங்கலம் அகோரகாளி கோயிலில் நவராத்திரி பூஜை | Navaratri | Navaratri Puja | Aghoris | Ariyamangalam
திருச்சி அரியமங்கலத்தில் ஜெய் அகோரகாளி கோயில் உள்ளது. காசியில் அகோரி பயிற்சி பெற்ற அகோரி குருவான மணிகண்டன் நிர்வகித்து வருகிறார். இங்கு சனிக்கிழமை, அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி மற்றும் விஷேச காலங்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடக்கும். சென்ற 22ம் தேதி நவராத்திரி தொடங்கியது முதல் தினசரி நவராத்திரி பூஜைகள் நடந்தது. விழாவின் 10ம் நாளான இன்று நள்ளிரவில் அகோரிகள் தங்கள் உடல் முழுதும் திருநீறு மற்றும் சாம்பலை பூசிகொண்டு சிறப்பு யாக பூஜை நடத்தினர். மகா ருத்ரா யாகத்தின் போது அகோரிகள் தலைகீழாக நின்று தியானம் செய்தனர். அகோரி குருவான மணிகண்டன், ருத்ராட்ச மாலைகளை உருட்டியபடி, மந்திரங்களை ஜெபித்து அக்னிகுண்டத்தில் மகா யாக பூஜை செய்தார். ஜெய் அகோர காளி, ஜெய் அஷ்ட கால பைரவர் மற்றும் அங்குள்ள ஏனைய பரிவார தெய்வங்களுக்கு மகா தீபாராதனை நடந்தது. சக அகோரிகள் டம்ராமேளம், சங்கு நாதங்கள் முழங்கி மந்திரங்களை ஓதினர். பெண் அகோரிகள், தமிழகம் மற்றும் வடமாநில பக்தர்கள் தரிசனம் செய்தனர். #Navaratri | #NavaratriPuja | #Aghoris | #Ariyamangalam | #Trichy
அச்சப்பட வைக்கிறது