உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காட்சிகளை பயன்படுத்தியும் தனுஷை தவிர்த்த நயன்தாரா! | Nayanthara: Beyond the Fairy Tale | Nayanthara

காட்சிகளை பயன்படுத்தியும் தனுஷை தவிர்த்த நயன்தாரா! | Nayanthara: Beyond the Fairy Tale | Nayanthara

நடிகை நயன்தாராவின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் ஆவணப் படம் ஒன்று ஓடிடியில் வெளியிடப்பட்டது. முன்னதாக இந்த ஆவணப்படம் இரு ஆண்டுகளாக வெளியாக இருக்க காரணமே தனுஷ் தான். நானும் ரவுடிதான் படத்தின் தயாரிப்பாளரான அவர், அதில் வரும் காட்சிகளை பயன்படுத்த என்ஓசி தரவில்லை. டிரைலரில் மூன்று விநாடி காட்சி பயன்படுத்த 10 கோடி கேட்டார் என தனுஷ் மீது குற்றம் சாட்டியதோடு, அவரை கடுமையாகவும் விமர்சித்து அறிக்கை வெளியிட்டார் நயன்தாரா. இது தமிழ் சினிமாவில் பெரும் விவாதத்தை உருவாக்கியது. இந்த சூழலில் படம் வெளியான பின் இப்போது மீண்டும் ஒரு அறிக்கையை நயன்தாரா வெளியிட்டு உள்ளார். அதில் தனது ஆவணப்படத்திற்கு தடையில்லா சான்றிதழ் வழங்கியவர்களுக்கு நடிகை நன்றி கூறி உள்ளார். உங்களை அணுகியபோது, எந்தவித தயக்கமோ, தாமதமோ இல்லாமல் என்ஓசி வழங்கிய அந்த பேரன்பை என்றென்றும் நன்றியோடு நினைவில் வைத்து கொள்வேன் என கூறியுள்ளார். ஹிந்தி நடிகர் ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கவுரி கான், கே. பாலச்சந்திரன், அர்ச்சனா கல்பாத்தி, உதயநிதி உள்பட தமிழ், மலையாளம், தெலுங்கு தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் பெயர்களையும் அவர் குறிப்பிட்டு உள்ளார். இதில் தனுஷ் மற்றும் அவரது தயாரிப்பு நிறுவனம் பெயர் இடம் பெறவில்லை. ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் படம் தொடர்பான 20 விநாடி காட்சிகளை பயன்படுத்தி உள்ளனர். ஆவணப்படத்தில் ஓரிரு விநாடிகள் வந்த காட்சிகளுக்கு எல்லாம் அந்த படங்களின் தயாரிப்பாளர்களுக்கு நன்றி சொன்ன நயன்தாரா, தனுஷ்க்கு மட்டும் நன்றி சொல்லாமல் தவிர்த்து உள்ளார்.

நவ 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ