மதுரை அரசு மருத்துவமனையில் மறுபிறவி எடுத்த பெண் | Needle in the heart | Woman injured | Madurai
இதயத்தில் நுழைந்த ஊசி! ஒரு இன்ச் கூட அசைய கூடாதுனு சொல்லிட்டாங்க.. நாகை மாவட்டம் திருக்குவளை தாலுகாவிற்கு உட்பட்ட மீனம்பநல்லூரில் வசிக்கும் ராம்குமார் மனைவி புவனேஸ்வரி, வயது 30. கணவர் கூலி வேலை செய்து வரும் நிலையில், புவனேஸ்வரி வீட்டில் இருந்தபடி தையல் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த வாரம் திங்களன்று வீட்டின் பரணில் பொருட்களை அடுக்கி வைத்தபோது கால் தவறி அருகில் இருந்த டேபிள் மீது விழுந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக டப்பாவில் இருந்த துணி தைக்கும் ஊசி புவனேஸ்வரி நெஞ்சில் குத்தி இதயம் உள்வரை சென்றுள்ளது. ஆனால் அதற்கான எந்த அறிகுறியும் உடனடியாக வெளியில் தெரியாததால் கீழே விழுந்த வலி தான் என புவனேஸ்வரி சாதாரணமாக வலி மாத்திரை எடுத்துக்கொண்டு வழக்கமான வேலைகளை செய்துள்ளார். 2 நாட்கள் கழித்து திடீரென புவனேஸ்வரிக்கு நெஞ்சில் சிறிதளவு ரத்தம் கசிந்து நெஞ்சு வலியோடு மூச்சு திணறலும் ஏற்பட்டதால் நாகை அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது புவனஸ்வரியின் இருதய பகுதியை CT Scan எடுத்து பார்த்தபோது நெஞ்சின் வழியாக இருதயம் வரை தையல் அங்கு ஸ்கேன் செய்து பார்த்த டாக்டர்கள் இதயம் வரை ஊசி குத்தி இருப்பதை கண்டறிந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவனைக்கு பரிந்துரைத்துள்ளனர். ஆம்புலன்ஸ் கிடைக்காமல் அலைந்து திரிந்து ஒரு வழியாக மதுரை அரசு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்த புவனேஸ்வரிக்கு, அங்குள்ள டாக்டர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து சிக்கலான இடத்தில் இருந்த ஊசியை அகற்றி அவரது உயிரை காப்பாற்றி உள்ளனர்.