உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தடுக்க தவறிய போலீஸ் மீது நடவடிக்கைக்கு உத்தரவு! | Nellai | Nellai Court | Nellai Police

தடுக்க தவறிய போலீஸ் மீது நடவடிக்கைக்கு உத்தரவு! | Nellai | Nellai Court | Nellai Police

நெல்லை அருகே உள்ள கீழநத்தம் கிராமத்தை சேர்ந்த 28 வயதான மாயாண்டி நேற்று நெல்லை கோர்ட் வாசலில் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டார். கொலை வழக்கில் பழிக்கு பழிவாங்கும் விதமாக இந்த சம்பவம் நடந்தது போலீஸ் விசாரணையில் தெரிந்தது. வழக்கு தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பட்டப்பகலில் சம்பவத்தை அரங்கேற்றி தப்பிய கும்பலை 2 வக்கீல்களும் ஒரு போலீஸ் எஸ்ஐ மட்டுமே விரட்டி அதில் ஒருவனை பிடித்தனர். கோர்ட் வாசல் அருகே நடந்த சம்பவத்தை போலீஸ் தடுக்க தவறியதாக கண்டனங்கள் எழுந்தன. இந்த வழக்கை சென்னை ஐகோர்ட் நேற்று தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்தது. இன்று வழக்கு நீதிபதிகள் எஸ்எம் சுப்பிரமணியம், குமரப்பன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வக்கீல்கள் சம்பவத்தின் போது போலீசார் நடவடிக்கை தொடர்பான வீடியோ காட்சிகளை நீதிபதிகளிடம் காட்டினர். அனைத்து மாவட்ட கோர்ட்டுகள் முன் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் கூறினர். வீடியோவை பார்த்த நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். சம்பவம் நடந்த போது 25க்கும் அதிகமான போலீசார் அங்கு இருந்துள்ளனர்.

டிச 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை