5 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம்? | New Governors | Home Minister Amit Shah | President M
சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜனாதிபதி திரவுபதி முர்முவை மூன்று முறை சந்தித்து விட்டார். இது டில்லி அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்கு மூன்று முறை சந்திக்க வேண்டும், என்ன பேசினர் என கேள்விகள் எழுந்துள்ளன. பிரதமர் மோடி சவுதி அரேபியாவுக்கு சென்று திரும்பியதும் புதிய கவர்னர்களை நியமிக்க முடிவெடுத்திருந்தார். ஆனால் அப்போது பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதால் அந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இப்போது நிலைமை சீரான நிலையில், ஐந்து மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமிப்பதற்கான வேலைகளை மத்திய அரசு துவங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாகத்தான் அமித் ஷா, ஜனாதிபதியை சந்தித்தார் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. தமிழகத்தை சேர்ந்த பாஜ மூத்த தலைவர் ஒருவரும் கவர்னராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக திமுகவை கடுமையாக விமர்சித்து வரும் அவருக்கு கவர்னர் பதவி நிச்சயம் என்கின்றனர்.