தமிழகத்தில் சந்தி சிரிக்கும் அரசியல் நாகரிகம்!
விக்கிரவாண்டி இடைத் தேர்தல் வரும் 10ம் தேதி நடக்கிறது. இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக, பாமக, நாம் தமிழர் வேட்பாளர்களை ஆதரித்து தலைவர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட தொரவி, பனையபுரம், அசோகபுரி உள்ளிட்ட இடங்களில் திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி நாதக வேட்பாளர் அபிநயா வாக்குச் சேகரித்தார். எதிர் திசையில் வாக்குச் சேகரித்தபடி திமுகவினர் வந்தனர். திமுக, நாதகவினர் நேருக்கு நேர் சந்திக்கும் நிலை ஏற்பட்டது.
ஜூலை 06, 2024