உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மோடி வருகை பற்றி ரஷ்யா சொல்வது என்ன? Russia | India | 2024 Summit

மோடி வருகை பற்றி ரஷ்யா சொல்வது என்ன? Russia | India | 2024 Summit

மோடி வருகை பற்றி ரஷ்யா சொல்வது என்ன? Russia | India | 2024 Summit | Masco | Modi | Putin இந்தியா - ரஷ்யாவுக்கு இடையிலான 22வது உச்சி மாநாடு மாஸ்கோவில் நடக்கிறது. இதில் பங்கேற்க 2 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு இன்று புறப்பட்டார். பிரதமர் மோடியின் வருகையை ரஷ்யா மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக கிரெம்ளின் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். அரசு முறை பயணம் என்பதால் பிரதமர் மோடி நிகழ்ச்சிகள் விரிவானதாகவே இருக்கும். அதனால் இரு நாட்டு தலைவர்களும் வெளிப்படையாக பேச முடியும். கிரெம்ளின் மாளிகையில் இரு தலைவர்களும் தனியாக பேச்சுகள் நடத்துவர். இரு நாடுகளின் உறவுகளுக்கு முக்கியத்துவம் தரும் பயணமாக இது அமையும். பிரதமர் மோடியின் ரஷ்ய வருகையை மேற்கு நாடுகள் உன்னிப்பாகவும், பொறாமையுடன் கவனிக்கின்றன. அந்த அளவுக்கு மோடியின் ரஷ்ய பயணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதே சமயம் அவர்கள் அதை தவறாகவும் கருதவில்லை என கிரெம்ளின் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறினார். ரஷ்யா - இந்தியா உறவுகள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேசுவார்கள். உலகின் தற்போதைய பிராந்திய, உலகளாவிய பிரச்னைகள் குறித்தும் தலைவர்கள் கருத்துகளை பறிமாறிக்கொள்வர் என ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகமும் ஏற்கெனவே தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ரஷ்யா - இந்தியா இடையிலான உச்சி மாநாடு நடக்கிறது. 2021ல் டில்லியில் இந்த மாநாடு நடைபெற்றது. இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு இப்போது மாஸ்கோவில் நடக்கிறது. 2019ல் ரஷ்யா சென்ற பிரதமர் மோடி, ஐந்தாண்டுகள் கழித்து மீண்டும் அந்நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதுவரை இரு நாடுகளுக்கும் இடையே 21 உச்சி மாநாடுகள் நடந்துள்ளன.

ஜூலை 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ