அவரு மாவட்டத்தையே இயக்குறாரு; ஆனா இவருக்கு மாத்திரை கூட கிடையாது | Senthil Balaji | savukku shankar
அவரு மாவட்டத்தையே இயக்குறாரு; ஆனா இவருக்கு மாத்திரை கூட கிடையாது | Senthil Balaji | savukku shankar கரூர் காந்திகிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவருக்கு சவுக்கு சங்கர் நடத்தி வந்த யூடியூப் சேனலில் பணிபுரிந்த விக்னேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. எங்கள் சேனலில் விளம்பரம் செய்தால் உங்கள் நிறுவனம் பெரிய அளவில் வளரும் என கூறி கிருஷ்ணனிடம், விக்னேஸ்வரன் 7 லட்சம் பெற்றதாக கூறப்படுகிறது. அதன் பின் விக்னேஷ் தன்னை ஏமாற்றி விட்டதாக கிருஷ்ணன் கரூர் போலீசில் புகார் கொடுத்தார். இது தொடர்பாக சவுக்கு சங்கரையும் விசாரிக்க அனுமதி கேட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கரை கரூர் கோர்ட்டில் இன்று ஆஜர் படுத்தினர். அப்போது ஏழு நாள் கஸ்டடி கேட்டு கரூர் போலீசார் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை பரிசீலித்த நீதிபதி பரத்குமார் 4 நாள் கஸ்டடி கொடுத்து உத்தரவிட்டார்.