/ தினமலர் டிவி
/ பொது
/ 4 மாவட்டங்களில் மட்டும் ஒலித்த எதிர்ப்பு கோஷம் |Congress protest|Against Annamalai|Selvaperunthagai
4 மாவட்டங்களில் மட்டும் ஒலித்த எதிர்ப்பு கோஷம் |Congress protest|Against Annamalai|Selvaperunthagai
தமிழக பா.ஜ தலைவர் அண்ணாமலை, சமீபத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகையை ரவுடி என விமர்சித்தார் . அதற்கு ரியாக்ஷன் கொடுத்த செல்வப்பெருந்தகை, நான் ரவுடி என்பதற்கு அண்ணாமலை ஆதாரம் காட்ட வேண்டும்; இல்லை என்றால் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடர்வேன் என எச்சரித்தார். இதையடுத்து செல்வப்பெருந்தகை மீதான வழக்குகளை பட்டியலிட்டு, மன்னிப்பு கேட்க மாட்டேன்; இந்த விவகாரத்தில் பின்வாங்கவும் மாட்டேன் என அண்ணாமலை பதிலடி கொடுத்தார். இதனால் ஆவேசமடைந்த காங்கிரசார் சென்னையில் கழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவராஜசேகரன் தலைமையில், அண்ணாமலை உருவ பொம்மை எரிப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஜூலை 11, 2024