உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆந்திராவில் நடந்த நடன நிகழ்ச்சியில் கொடூரம்

ஆந்திராவில் நடந்த நடன நிகழ்ச்சியில் கொடூரம்

ஆந்திராவில் நடந்த நடன நிகழ்ச்சியில் கொடூரம் Hen bitten by a dancer in public function| Andhra Peta complaint| ஆந்திராவின் அனகாப்பள்ளியில் தனியார் அமைப்பின் சார்பில் கலை, நடன நிகழ்ச்சி நடந்தது. அதில் சினிமா பாடல்களுக்கு நடனக் குழுவினர் நடனம் ஆடினர். தெலுங்கு காஞ்சனா பட பாடலுக்கு நடனம் ஆடிய குழுவினர், தத்ரூபமாக சினிமா படத்தில் வருவது போலவே வேடமணிந்து ஆடினர். அப்போது, மெயின் டான்சர் கையில் கோழியை பிடித்தபடி ஆடினார். யாரும் எதிர்பாராத வகையில் திடீரென கோழியின் தலையை கடித்து துப்பினார். கோழியின் உடம்பிலிருந்து ரத்தம் சொட்டச் சொட்ட அது துடிதுடித்து இறந்தது. இறந்த கோழியை கையில் ஏந்தியபடி அவர் தொடர்ந்து நடனம் ஆடினார். குழந்தைகள், பெண்கள், பொதுமக்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில், இப்படி ஒரு கொடூரம் அரங்கேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, விலங்குகள் நல அமைப்பான பீட்டா சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ், நடனக் கலைஞர் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். விழா மேடையில், கோழியின் தலையை கடித்து துப்பி துடிதுடிக்க கொன்ற சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜூலை 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !