உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு என்ன நேர்ந்தது

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு என்ன நேர்ந்தது

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு என்ன நேர்ந்தது கடலூர் மாவட்டம் காராமணி குப்பம் பகுதியை சேர்ந்தவர்கள் சுரேஷ்குமார் - கமலேஸ்வரி (வயது 60) தம்பதி. கம்பவுண்டராக ஆக பணிபுரிந்து ஓய்வுப்பெற்ற சுரேஷ்குமார் 6 மாதத்திற்கு முன் இறந்தார். அதன் பின் கமலேஸ்வரி தனியாக வசித்து வந்தார். அவர்களது மூத்த மகன் சுரேந்திர குமார் (வயது 42) ஆந்திராவின் காக்கிநாடா பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இளைய மகன் சுகந்த் குமார் (வயது 40) மனைவி மற்றும் மகன் நிஷாந்த் குமாருடன் (வயது 9) ஹைதராபாத்தில் வசித்து வந்தார். 10 நாள்களுக்கு முன் காராமணி குப்பம் வந்த சுகந்த் குமார் மற்றும் நிஷாந்த் குமார் பாட்டி கமலேஸ்வரியுடன் அதே வீட்டில் தங்கினர். இந்நிலையில் கமலேஸ்வரியின் வீடு வெளியே பூட்டப்பட்டிருந்த நிலையில், வீட்டினுள் இருந்து புகை நாற்றம் வெளிவந்ததை அடுத்து, அக்கம் பக்கத்தினர் நெல்லிக்குப்பம் போலீசுக்கு தகவல் அளித்தனர். போலீசார் வீட்டை திறந்து பார்க்கையில் கமலேஸ்வரி, சுகந்த் குமார், நிஷாந்த் ஆகிய மூவரும் எரிந்த நிலையில் ஆளுக்கொரு அறையில் பிணமாக கிடந்துள்ளனர். மேலும் வீடு முழுவதும் ரத்தக்கறையும் பரவிக்கிடந்துள்ளது. இதனால் யாரோ மூவரையும் கொலை செய்துவிட்டு அவர்களை எரித்து சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்த நெல்லிக்குப்பம் போலீசார், சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

ஜூலை 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை