உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விண்டோஸ் முடக்கத்தால் சென்னையில் 16 விமானங்கள் ரத்து Microsoft Windows Problem| Flight Delay

விண்டோஸ் முடக்கத்தால் சென்னையில் 16 விமானங்கள் ரத்து Microsoft Windows Problem| Flight Delay

விண்டோஸ் முடக்கத்தால் சென்னையில் 16 விமானங்கள் ரத்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் சாப்ட்வேர் அப்டேட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, உலகெங்கும் 30 கோடிக்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்கள் முடங்கின. இதனால், விமானங்கள் போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டது. சென்னை விமான நிலையத்தில் நேற்று 28 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 60 விமானங்கள் பல மணி நேரம் தாமதமாக கிளம்பின. பல நிறுவனங்கள், கையால் எழுதிய போர்டிங் பாஸ் தான் வழங்கின. விமானங்கள் ரத்து, தாமதம் காரணமாக, சென்னையில் உள்ளூர் பயணிகள் பலர் திரும்பி சென்றனர். வெளியூர் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வந்து விமானத்திற்காக காத்திருந்தவர்கள் உணவு, ஓய்வறையின்றி கடும் சிரமத்திற்கு ஆளாகினர். சென்னை ஏர்போர்ட்டில் இருந்து லண்டன், சிங்கப்பூர், துபாய், குவைத், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்கள் மற்றும் டெல்லி, மும்பை, கொல்கத்தா புனே, அந்தமான், திருவனந்தபுரம், கொச்சி, திருச்சி, மதுரை என உள்நாட்டு விமானங்கள் பல மணி நேரம் தாமதமாக புறப்பட்டன. 2வது நாளாக இன்றும் அதிகாலை முதல் பகல் 10 மணி வரை சென்னை விமான நிலையத்தில் 16 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பல மணி நேரம் காத்திருப்புக்கு பின் விமான சேவை ரத்து என அறிவிக்கப்பட்டதால், விமான நிறுவன ஊழியர்களுடன் பயணிகள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சற்று பரபரப்பான சூழல் நிலவியது. நேற்றைய நிலைமையை ஒப்பிடுகையில் இன்று விமான போக்குவரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், சர்வர் கோளாறு விரைவில் சரியாகிவிடும் என நம்புவதால், மாலைக்குள் இயல்பு நிலைக்கு வரும் என விமான நிறுவனங்கள் கூறின.

ஜூலை 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ