உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பொருளாதார சுமை ஏற்றிவிட்டு வரி குறைப்பு பற்றி பேசுவதா? Annamalai| BJP| mk stalin| budget|

பொருளாதார சுமை ஏற்றிவிட்டு வரி குறைப்பு பற்றி பேசுவதா? Annamalai| BJP| mk stalin| budget|

பொருளாதார சுமை ஏற்றிவிட்டு வரி குறைப்பு பற்றி பேசுவதா? Annamalai| BJP| mk stalin| budget| மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும்படி முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார். மெட்ரோ ரயில் உள்ளிட்ட ரயில்வே திட்டங்களுக்கான நிதி; வருமான வரிச்சுமை குறைப்பு; தாம்பரம்- செங்கல்பட்டு மேம்பால விரைவு சாலை, மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல்; வீட்டு வசதி திட்டங்களுக்கான செலவு வரம்பு உயர்வு வேண்டும் என கேட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்திற்கு மத்திய அரசு தந்த திட்டங்களை பட்டியலிட்டுள்ளார். 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கிய நலத்திட்டங்களின் மதிப்பு 10.76 லட்சம் கோடி ரூபாய். இது, தமிழகத்தின் நேரடி வரிப்பங்கீடை விட இரண்டு மடங்கு அதிகம். 2006 தேர்தலின்போது, திமுக கொடுத்த வாக்குறுதியான, கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணி, மத்திய அரசின் 9,386 கோடி நிதியில்தான் நடைபெறுவது முதல்வருக்கு தெரியுமா? அல்லது பணி முடிந்ததும் திமுக ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ளலாம் என்று நினைக்கிறாரா? திமுகவின் மற்றொரு தேர்தல் வாக்குறுதியான மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்திற்கு, மத்திய அரசு 5,800 கோடி ஒதுக்கியதை ஸ்டாலின் மறந்து விட்டாரா? அல்லது மறைக்க முயற்சிக்கிறாரா? கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு மத்திய அரசு சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்ய ஒப்புதல் வழங்கிய விவரமாவது முதல்வருக்கு தெரியுமா? 2009-2014 வரை ஆட்சியில் இருந்த திமுக காங்கிரஸ் கூட்டணி அரசு, தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்தது சுமார் ரூ. 800 கோடி மட்டுமே. ஆனால், பிரதமர் மோடி இந்த ஆண்டு மட்டும் ரூ.6,331 கோடிக்கான ரயில்வே திட்டங்களைத் தமிழகத்துக்கு வழங்கியுள்ளார். ஒரே நேரத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளை, பிரதமர் மோடி தமிழகத்துக்கு வழங்கினார். மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி அமைப்போம் என்று வாக்குறுதி கொடுத்த திமுக, எத்தனை அரசு மருத்துவக் கல்லூரிகளை அமைத்தது. பால், தயிர் விலை, சொத்து வரி, மின்சாரம், குடிநீர், பத்திரப் பதிவு கட்டணங்கள் என அனைத்தையும் பல மடங்கு உயர்த்தி, நடுத்தர மக்கள் வாழ்க்கையில் பெரும் பொருளாதார சுமையை ஏற்றிவிட்டு, வருமானவரி குறித்து பேச ஸ்டாலினுக்கு கூச்சமாக இல்லையா? என அண்ணாமலை கேட்டுள்ளார்.

ஜூலை 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி