நேருக்கு நேர் விவாதிக்கலாமா? தென்னரசுக்கு தங்கமணி சவால்! Thangamani VS Thangam thennarasu
உதய் மின் திட்டத்தினால் தமிழக மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை. மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தன்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? என முன்னாள் மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி சவால் விடுத்துள்ளார். அதிமுக எம்எல்ஏ தங்கமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: உதய் திட்டத்தில் கையெழுத்திட்டதால் தமிழக மின்சார வாரியத்துக்கு கிடைத்த நன்மைகளில் ஒருசிலவற்றைக் குறிப்பிட விரும்புகிறேன். மத்திய அரசிடமிருந்து தடையின்றி நிலக்கரி பெற வேண்டியதை கருத்தில் கொண்டும் மத்திய அரசின் நிறுவனங்களிடமிருந்து குறைந்த வட்டியில் கடன் பெற்று மின் பகிர்மான கழகத்தின் செயல்பாடுகளை தொடர்ந்து மேன்மைப்படுத்தவும் உதய் திட்டத்தை 2017 முதல் செயல்படுத்த அதிமுக அரசு ஒப்புக்கொண்டது.