அதிரடியாக களத்தில் இறங்கிய ராகுல் | Karthik chidhambaram | Congress M.P | Controversy speech
அதிரடியாக களத்தில் இறங்கிய ராகுல் | Karthik chidhambaram | Congress M.P | Controversy speech | Explanation to Rahul | தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் நடந்தது. அதில் பேசிய மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரசை வலிமைப்படுத்த கிடைத்த கருத்தியல் தான் காமராஜர் ஆட்சி. என்றைக்காவது ஒரு நாள் காமராஜர் ஆட்சி என்கிற கனவு மெய்ப்பட வேண்டும். அதற்கு கட்சியை வலிமைப்படுத்த வேண்டும் என்றார். செல்வப்பெருந்தகைக்கு பதிலடி தரும் வகையில் முன்னாள் தலைவர் இளங்கோவன் பேசுகையில், ஆட்சிக்கு என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். திராவிட ஆட்சி, காமராஜர் ஆட்சி, கக்கன் ஆட்சி என்றல்லாம் பெயர் வைக்கலாம். என்னை பொறுத்தவரையில் ஸ்டாலின், காமராஜர் ஆட்சி தருகிறார் என்றார். இந்த மோதலுக்கு இடையில், திமுக கூட்டணிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில், சிவகங்கை காங்கிரஸ் எம்.பி கார்த்தியும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். அதாவது, தமிழகத்தில் கூலிப்படை கொலைகள் அதிகரித்துள்ளன. போலீசார் என்கவுன்டர் செய்வது, சட்டத்தை காப்பாற்ற என நினைக்க வேண்டாம். வழக்குகளை முடிக்கவே என்கவுன்டர்கள் நடக்கின்றன. மின் கட்டண உயர்வு பற்றி காங்கிரஸ் பேச வேண்டும். மக்கள் பிரச்னைக்கு குரல் கொடுக்கவில்லை என்றால், மக்கள் மனதில் நாம் இருக்க மாட்டோம் என்றார். அதோடு விடாமல் தனியார் டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில், திமுகவை உசுப்பேற்றும் விதமாக, அதிமுக தீண்டத்தகாத கட்சி அல்ல என்றார். கார்த்தி பேச்சும், அவரது கருத்தும் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கார்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளங்கோவன், அழகிரி ஆதரவாளர்கள் டில்லி மேலிடத்திடம் வலியுறுத்தி இருப்பதாக தமிழக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுகவின் மூத்த எம்.பி ஒருவர் டில்லியில் சோனியாவை சந்தித்து, தமிழகத்தில் கூட்டணி குழப்பத்தை கார்த்தி ஏற்படுத்துவதாக வெளிப்படையாகவே புகார் தெரிவித்திருக்கிறார். அந்த புகார் குறித்து விசாரிக்குமாறு ராகுலிடம் சோனியா கூறியிருக்கிறார். தனியார் ஏஜன்சி மூலம், தமிழக காங்கிரசில் நடக்கும் அனைத்து விவகாரங்களையும் ராகுல் விசாரித்து அறிந்துள்ளார். அதன்பின், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜோய் குமாரிடம் விளக்கம் கேட்டுள்ளார். அவரும், தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டங்களில், கட்சியினரை ஊக்கப்படுத்த, காமராஜர் ஆட்சி அமைப்போம் என்ற கருத்தை வலியுறுத்தி பேசுகின்றனர். மற்றபடி திமுக கூட்டணிக்கு விரோதமாக யாரும் செயல்படவில்லை என ராகுலிடம் விளக்கம் அளித்திருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.