உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கோவை மேயர் ரங்கநாயகி கொடுத்த வாக்குறுதி | Coimbatore mayor | Ranganayagi

கோவை மேயர் ரங்கநாயகி கொடுத்த வாக்குறுதி | Coimbatore mayor | Ranganayagi

கோவை மேயர் ரங்கநாயகி கொடுத்த வாக்குறுதி | Coimbatore mayor | Ranganayagi | Mayor elected without competition | Coimbatore | கோவை மாநகராட்சியை பொறுத்தவரை 100 வார்டுகள் உள்ளன. அங்கு கடைசியாக நடந்த உள்ளாட்சி தேர்தலில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 96 வார்டுகளை கைப்பற்றியது. 3 வார்டுகளில் அதிமுகவும், 1 வார்டில் எஸ்டிபிஐ கட்சியும் வெற்றி பெற்றது. தேர்தல் வெற்றிக்கு பின் கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயர், திமுகவின் முதல் மேயர் என்ற சிறப்புகளுடன் கல்பனா ஆனந்தகுமார் பதவியேற்றார். ஆனால் இரண்டே ஆண்டுகளில் உடல் நிலை, குடும்ப சூழலை காரணம் காட்டி மேயர் பதவியை ராஜினாமா செய்தார். காலியாக இருந்த கோவை மாநகராட்சி மேயர் பதவி இடத்தை நிரப்ப மறைமுக தேர்தல் நடத்த கலெக்டருக்கு மாநில தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தது. கணபதி பகுதியை சேர்ந்த 29வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி திமுக மேயர் வேட்பாளராக தேர்வானார். கோவை மாநகராட்சி கமிஷனரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சிவகுரு பிரபாகரனிடம் ரங்கநாயகி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் தேர்தல் நடைபெற இருந்த நிலையில், ரங்கநாயகியை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனால் கோவை மாநகராட்சி மேயராக ரங்கநாயகி போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் பெற்றுக்கொண்டார்

ஆக 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ