சீமானின் வித்தியாசமான சுதந்திர தின வாழ்த்து Naam Tamilar Seeman | NTK | India Independence Day
சீமானின் வித்தியாசமான சுதந்திர தின வாழ்த்து Naam Tamilar Seeman | NTK | India Independence Day சுதந்திர தினத்தையொட்டி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது: பல்லாயிரம் வீரர்கள் தங்களது இன்னுயிரை ஈந்து, செக்கடியிலும் சிறைச்சாலையிலும் வதைபட்டு, மிதிபட்டு, அரும்பாடுபட்டு பெற்ற சுதந்திரம் இன்று அனைவருக்கும் சரியாக, சமமாக இருக்கிறதா? கல்லூரியில் படிக்கும் பெண் வன்புணர்ச்சி செய்யப்படுகிறாள், மருத்துவமனையில் வேலை பார்க்கும் பெண் மருத்துவர் வன்புணர்ச்சி செய்யப்படுகிறாள், வீட்டருகே விளையாடும் பெண் குழந்தைகூட வன்புணர்ச்சி செய்யப்படுகிறாள். படிக்க வசதியற்ற குழந்தைகள், போதையில் தள்ளாடும் இளைய தலைமுறை, ஆதரவற்று நிற்கும் பெண்கள், வறுமையில் வாடும் முதியோர்கள், வியாபாரப் பண்டம் போல் விற்கப்படும் மருந்துவம், கல்வி, லஞ்சத்தில் திளைக்கும் அதிகாரிகள், ஊழலில் திளைக்கும் ஆட்சியாளர்கள், மது விற்கும் அரசு என எதுவொன்று இங்கு சரியாக, முறையாக இருக்கிறது? அரசின் தவறுகளை எதிர்த்துப் போராடினால், கேள்வி கேட்டால் கொடுஞ்சிறை என்றால் எங்கே இருக்கிறது கருத்து சுதந்திரம்? காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு, உத்தரபிரதேசத்தில் ஊரடங்கு, மணிப்பூரில் மதக்கலவரம், பஞ்சாபில் பதற்றமான சூழல், ஆந்திராவில் அடக்குமுறை, கர்நாடகாவில் காவிரி நீர் தர மறுத்து கடையடைப்பு, குஜராத்தில் குண்டுவெடிப்பு, கொல்கத்தாவில் கொடூரக் கொலைகள், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு என சுடுகாடாய் மாறி நிற்கும் நாட்டில் எங்கே இருக்கிறது சுதந்திரம்? தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா! இப்பயிரை கண்ணீரால் காத்தோம்! கருகத்திருவுளமோ? என்ற மகாகவி பாரதியின் வார்த்தைகளில் உள்ள வலி நம் உள்ளத்திலும் ஆறாமல் அப்படியே இருக்கிறது. எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும் சமத்துவ சமுதாயம் அமைவது எப்போது? அமைப்பது யார்? உண்மையான சுதந்திரத்தை நாம் ஒன்றுகூடி போராடிப் பெற்றிட விடுதலை திருநாளில் உறுதியேற்போம். விடுதலைக்கு வித்தான மாவீரர்களுக்கு வீரவணக்கம். அனைவருக்கும் விடுதலை திருநாள் வாழ்த்துக்கள் என சீமான் அறிக்கையில் கூறியுள்ளார்.