ஒரு நாள் விற்பனை வசூல் எவ்வளவு தெரியுமா? | Karunanidhi commemorative coin | Coin sold
ஒரு நாள் விற்பனை வசூல் எவ்வளவு தெரியுமா? | Karunanidhi commemorative coin | Coin sold | DMK | Arivalayam | மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நுாற்றாண்டு நினைவை ஒட்டி, அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணய வெளியீட்டு விழா சென்னையில் கடந்த 18ம் தேதி நடந்தது. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நாணயத்தை வெளியிட, முதல்வர் ஸ்டாலின் பெற்றுக்கொண்டார். மறுநாள் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஸ்டாலின், நாணயம் அறிவாலயம் வந்துவிட்டது. யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் சென்று நாணயத்தை பெற்றுக் கொள்ளலாம். நூறு ரூபாய் நாணயத்தின் மதிப்பு 10,000 ரூபாய். யார் வேண்டுமானாலும் 10 ஆயிரம் ரூபாய் செலுத்தி நாணயத்தை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அந்த நாணயத்திற்கு மதிப்பே கிடையாது என்றார். இதையடுத்து கருணாநிதி உருவம் பொறிக்கப்பட்ட நாணயத்தை வாங்க திமுக-வினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள், கட்சி நிர்வாகிகள் நேற்று ஆர்வமுடன் அறிவாலயத்தில் இருந்து நாணயங்களை வாங்கிச் சென்றனர். நேற்று மட்டும், 500 கருணாநிதி நினைவு நாணயங்கள், 50 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளன. அதேசமயம், கருணாநிதி மீது அன்பும் பாசமும் கொண்ட தொண்டர்கள், 100 ரூபாய் கொடுத்து நாணயம் வாங்க, வழிவகை செய்ய வேண்டும் என, கட்சி தலைமைக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது. திமுக கூட்டணி கட்சி தலைவர்களான செல்வப்பெருந்தகை, வைகோ, காதர்மொய்தீன், ஈஸ்வரன் போன்றவர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் சார்பில், அமைப்புச்செயலர் ஆர்.எஸ்.பாரதி, நேற்று நாணயத்தை வழங்கினார்; இதற்கு கட்டணம் எதுவும் வாங்கவில்லை. திருமாவளவன், பாலகிருஷ்ணன், முத்தரசன் போன்றவர்கள் வெளியூரில் இருந்ததால், அவர்களுக்கு அடுத்தடுத்த நாட்களில் நாணயம் வழங்கப்பட உள்ளது