மீனவர்களிடம் வசமாக சிக்கிய திமுக எம்.பி கனிமொழி | Kanimozhi M.P | Fishers siege
மீனவர்களிடம் வசமாக சிக்கிய திமுக எம்.பி கனிமொழி | Kanimozhi M.P | Fishers siege | Tharuvaikulam | Tuticorin | தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் மீனவ கிராமத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 22 மீனவர்களை எல்லை தாண்டியதாக கடந்த 5ம் தேதி இலங்கை கடற்படை கைது செய்தது. 20ம் தேதி வரை இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்களின், நீதிமன்ற காவலை மீண்டும் செப்டம்பர் 3 வரை நீட்டித்து இலங்கை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனால் தருவைகுளம் மீனவ மக்கள் கடும் துயரத்தில் கொதித்து போய் உள்ளனர். இந்த சூழலில் தான் தருவைகுளம் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சிக்காக சென்ற திமுக எம்பி கனிமொழி, எம்எல்ஏ சண்முகையாவை மீனவ மக்கள் முற்றுகையிட்டனர். தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வாடி வருவதாகவும் கைது செய்த மீனவர்களை மீட்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டிய அவர்கள், தொழிலுக்கு சென்ற வீட்டு ஆண்கள் கரை திரும்பாததால் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருவதாக வாக்குவாதம் செய்தனர். பேச்சுவார்த்தைகள் நடப்பதாக கனிமொழி சொன்ன விளக்கத்தை ஏற்க மறுத்த மீனவர்கள், தங்கள் ஆதங்கத்தை கொட்டி தீர்த்ததால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு பரபரப்பு நிலவியது. ஒரு வழியாக அவர்களை அமைதிபடுத்தி டில்லியில் எடுக்கும் முயற்சிகளை விளக்கிய கனிமொழி, விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டார்.