உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டெலிகிராம் சிஇஓ கைதில் மறைந்திருக்கும் பின்னணி! | Telegram CEO Arrest | Pavel Durov

டெலிகிராம் சிஇஓ கைதில் மறைந்திருக்கும் பின்னணி! | Telegram CEO Arrest | Pavel Durov

டெலிகிராம் சிஇஓ கைதில் மறைந்திருக்கும் பின்னணி! | Telegram CEO Arrest | Pavel Durov | Juli Vavilova டெலிகிராம் துணை நிறுவனரும், அதன் சிஇஓவுமான பாவெல் துரோவ், கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். ஐரோப்பிய நாடான அசர்பைஜானில் இருந்து பிரான்சின் பாரிஸ் ஏர்போர்ட் வந்திறங்கிய அவரை பிரான்ஸ் போலீஸ் கைது செய்தது. ரஷ்யாவை சேர்ந்தவரான துரோவ், பாரிஸ் மற்றும் ரஷ்யாவில் இரட்டை குடியுரிமை பெற்றவர். பணப்பரிமாற்ற மோசடி, போதை பொருள் கடத்தல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு டெலிகிராம் துணை போவதாக பிரான்ஸ் அரசு அவர் மீது குற்றம் சுமத்தி இருந்தது. இதன் அடிப்படையில் தான் அவர் கைதானதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் கைதுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் மர்மங்கள் குறித்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. 2010ல் உக்ரைனில் டெலிகிராம் பயன்படுத்துபவர்கள், எந்த செய்திகளை பகிர்ந்து கொள்கிறார்கள்? என்ற விவரங்களை ரஷ்யா கேட்டது. பயனர்களின் பிரைவசி ரொம்ப முக்கியம். என தகவல்களை தர டெலிகிராம் மறுத்தது. மோதல் போக்கை தவிர்க்க அவர் அமெரிக்காவுக்கு ஜம்ப்பானார். அங்கேயும் இதே போல் நெருக்கடி ஏற்பட்டது. டிரம்ப் ஆதரவாளர்கள் கேப்பிட்டல் ஹாலுக்குள் நடத்திய கலவரம் டெலிகிராமில் திட்டமிடப்பட்டதாக கூறப்பட்டது. அந்த தனிநபர் தகவல்களை தருமாறு ஜோ பைடன் நிர்வாகம் கேட்டது. ஒருமுறை கொடுத்துவிட்டால், இதே போல் பல நாடுகளின் அரசுகள் முயற்சிக்கும் என்பதால் அப்போதும் துரோவ் மறுத்தார். அங்கிருந்தும் வெளியேறி துபாயில் டெலிகிராம் தலைமை அலுவலகத்தை நடத்தி வந்தார். இப்படி பயனர்களின் தகவல்களை அரசுகளிடம் இருந்து மறைத்த விஷயங்களுக்காக தான் துரோவ் கைதாகி உள்ளார் என கூறப்படுகிறது. இந்த சூழலில் அவர் கைதாகும் போது அவருடன் இளம் பெண் ஒருவர் இருந்தார். அவர் பெயர் ஜூலி வவிலோவா, 24. ஜூலி துரோவின் காதலி என்று கூறப்படுகிறது. துரோவ் கைதானதை தொடர்ந்து ஜூலி எங்கு போனார் என்ன ஆனார் என்று யாருக்கும் தெரியவில்லை. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜூலி கிரிப்டோ டிரெயினராகவும் , வீடியோ கேம் ஸ்ட்ரீமராகவும் இருந்து வருகிறார். ஆங்கிலம், ரஷ்யன், ஸ்பானிஷ், அரபு ஆகிய நான்கு மொழிகளிலும் சரளமாக பேசக்கூடியவர். கஜகஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான் , அஜர்பைஜான் என பல நாடுகளுக்கு துரோவுடன் பயணம் செய்ததை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்துள்ளார். இதுவே துரோவின் அடுத்தடுத்த நகர்வுகளை கண்காணித்து பிரான்ஸ் எல்லைக்குள் வரும்போது அவரை கைது செய்ய உதவியாக இருந்ததாக பார்க்கப்படுகிறது. இது தவிர ஜூலி இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாத் அமைப்பை சேர்நதவர் என்ற கருத்துக்களும் இப்போது பகீர் கிளப்பி உள்ளன. இதற்கு பின்னாலும் நம்பும் படி ஒரு காரணம் உள்ளது. பாலஸ்தீனம் இஸ்ரேல் போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா முழு உதவி அளித்து வருகிறது என விமர்சனம் கிளம்பியுள்ளது. இதற்கு டெலிகிராம் தான் முக்கிய காரணம். காசாவில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு ஆதாரங்களாக வீடியோ இருக்கிறது. டெலிகிராம் மூலம் லீக் செய்யப்பட்ட இந்த வீடியோக்கள் சர்ச்சையை கிளப்பியது. அமெரிக்காவால் இதை கட்டுப்படுத்த முடியவில்லை. உக்ரைன் ரஷ்யா போரிலும் அமெரிக்கா நேரடியாக பங்கேற்கவில்லை என கூறி வருகிறது. ஆனால் உக்ரைன் போர் முனையில் இறந்த நேட்டோ வீரர்களின் போட்டோக்கள் டெலிகிராமில் பகிரப்பட்டன. அமெரிக்கா தொடர்ந்து வீரர்களை அனுப்புகிறது என டெலிகிராம் உதவியுடன் ரஷ்யா நிரூபித்தது. இப்படி ஒரு பின்னணியில் தான் இஸ்ரேல் உளவாளியை அனுப்பி துரோவை தூக்கி இருக்கலாம் என பரபரப்பு புகார்கள் கிளம்பி உள்ளன.

ஆக 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ