/ தினமலர் டிவி
/ பொது
/ அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் பெண் போலீசுக்கு காயம் | ADMK Protest | Thanjavur | Palanisami|Annamalai
அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் பெண் போலீசுக்கு காயம் | ADMK Protest | Thanjavur | Palanisami|Annamalai
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, பாஜ மாநில தலைவர் அண்ணாமலை ஒருவருக்கொருவர் விமர்சித்து பேசி இருந்தனர். இதனால் அண்ணாமலையை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டங்களை கையில் எடுத்தனர். தஞ்சாவூரில் இன்று அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது அண்ணாமலையின் போட்டோவை செருப்பு, துடைப்பம் கொண்டு அடித்தும் அவரது உருவ பொம்மையை தீயிட்டு எரிக்கவும் முயன்றனர். இதை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்தனர்.
ஆக 28, 2024