/ தினமலர் டிவி
/ பொது
/ கண்தானம் செய்ய வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி! Eye Donation Rally | Chennai | Sugasini
கண்தானம் செய்ய வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி! Eye Donation Rally | Chennai | Sugasini
கண்தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8ம் தேதி வரை தேசிய கண்தான தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி ரோட்டரி ராஜன் கண் வங்கி மற்றும் ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் - தி.நகர் இணைந்து, பெசன்ட் நகர் கடற்கரையில் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் கண் தானம் வழங்குவோர், அதற்கான அட்டையில் கையெழுத்திட்டனர். அதில், நான் என் கண்களை தானம் செய்கிறேன். நீங்களும் கண் தானம் செய்யுங்கள் என எழுதப்பட்டிருந்தது. நடிகை சுஹாசினி பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் 5 கல்லுாரிகளில் இருந்து, 1,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
செப் 01, 2024