உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நின்ற பஸ் மீது கார் மோதல் ராமேஸ்வரம் அருகே சம்பவம் 5 dies in road accident

நின்ற பஸ் மீது கார் மோதல் ராமேஸ்வரம் அருகே சம்பவம் 5 dies in road accident

நின்ற பஸ் மீது கார் மோதல் ராமேஸ்வரம் அருகே சம்பவம் 5 dies in road accident car bus accident Rameswaram ராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சிமடத்தை சேர்ந்தவர் ராஜேஷ் வயது 33. இவரது மனைவி பாண்டி செல்வி. இவர்களது மகள்கள் தர்ஷினா ராணி வயது 8, பிரணவிகா ராணி வயது 4. கடந்த 12 நாட்களுக்கு முன் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பிடலுக்கு அழைத்து சென்றனர். சிகிச்சை முடிந்ததும் வாடகை காரில் ராஜேஷ், அவரது மனைவி பாண்டி செல்வி, 2 மகள்கள், கைக்குழந்தை மற்றும் உறவினர்கள் செந்தில் மனோகரன், அங்காலேஸ்வரி ஆகியோருடன் தங்கமடத்துக்கு திரும்பி வந்தனர். ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்று விட்டு, வாடகை காரில் தங்கச்சிமடத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர். உச்சிப்புளி அடுத்த பிரப்பன் வலசை அருகே சென்றபோது, காருக்கு முன்னால் ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் இருந்த பயணி ஒருவர் வாந்தி எடுத்தார். இதனால் டிரைவர் திடீரென பஸ்சை நெடுஞ்சாலையில் நிறுத்தினார். அந்த பஸ் மீது பின்னால் ராஜேஷ் குடும்பத்தினர் வந்த கார் கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் ராஜேஷ், அவரது மகள்கள் தர்ஷினா ராணி, பிரணவிகா மற்றும் உறவினர்கள் செந்தில் மனோகரன், அங்காலேஸ்வரி ஆகிய 5 பேர் ஸ்பாட்டிலேயே பலியானார்கள். பாண்டிச்செல்வி, 12 நாள் குழந்தை மற்றும் கார் டிரைவர் பிரிட்டோ ஆகியோர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டனர். விபத்து குறித்து உச்சிப்புளி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

செப் 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி