மதம், மொழி குறித்த ராகுல் பேச்சுக்கு பாஜ கண்டனம் Rahulgandhi| congress| hardeep singh puri
அமெரிக்காவின் விர்ஜினியாவில் நடந்த நிகழ்ச்சியில், அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் ராகுல் உரையாற்றினார். அப்போது ஆர்எஸ்எஸ், மதம், மொழி, ஜாதி குறித்து அவர் பேசினார். இந்தியாவில் இப்போது சண்டை நடக்கிறது. இந்தியாவில் சீக்கியர்கள் இனி தலைப்பாகை அணிந்து கொள்ள முடியுமா; கடா எனப்படும் காப்பு கைகளில் அணிய முடியுமா என்பதற்கான சண்டை நடக்கிறது. அவர்களால் குருத்வாராவுக்கு இனி செல்ல முடியுமா என சண்டை நடக்கிறது. இது சீக்கியர்களுக்கு மட்டுமல்ல அனைத்து மதங்களுக்கும் நடக்கிறது. இந்தியாவில் சில மாநிலங்கள், மொழி, மதங்கள், ஜாதிகளில் கூட ஆர்எஸ்எஸ் அமைப்பு ஏற்றத்தாழ்வுகளை பார்க்கிறது. இதற்காகவே சண்டை நடக்கிறது என ராகுல் கூறியிருந்தார். இதை மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கண்டித்துள்ளார். இந்தியாவில் சீக்கியர்கள் தலைப்பாகை அணியவும், காப்பு அணியவும் போராட வேண்டி இருப்பதாக ராகுல் பேசியிருப்பது மிகவும் ஆபத்தானது.