பிரதமர் மோடிக்கு தனது சாதனையை அர்ப்பணித்த அண்ணாமலை | Annamalai
பிரதமர் மோடிக்கு தனது சாதனையை அர்ப்பணித்த அண்ணாமலை | Annamalai | BJP state president | Ben nevis peak | Scotland | பா.ஜ மாநில தலைவர் அண்ணாமலை ஆக்ஸ்போர்டு பல்கலையில் சர்வதேச அரசியல் படிக்க லண்டன் சென்றுள்ளார். படிப்பு முடிந்து டிசம்பரில் சென்னை திரும்புகிறார். லண்டன் பயணத்தின் ஒரு பகுதியாக ஸ்காட்லாந்தில் உள்ள 1,345 மீட்டர் உயரம் கொண்ட பென் நெவிஸ் சிகரம் மீது தேசியக்கொடியுடன் ஏறி உள்ளார். அந்த போட்டோக்களுடன் அண்ணாமலை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஸ்காட்லாந்தில் உள்ள பென் நெவிஸ் சிகரம் பிரிட்டனின் மிக உயரமானது. இதில் ஏற ஒரு வாய்ப்பு கிடைத்தது. சவாலை ஏற்று உச்சியை அடைந்தேன். எனது இந்த சாதனையை பிரதமர் மோடிக்கு அர்ப்பணிக்கிறேன். அவரது தொலைநோக்கு பார்வையான மிஷன் லைப் பிரச்சாரம், ஒரு நிலையான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதையும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதையும் நோக்கமாக கொண்டது. அதன்படியே எனது இந்த பயணமும் மிகவும் அறிவார்ந்ததாக அமைந்தது. பயணம் முழுதும் பிளாஸ்டிக் இல்லாத, தூய்மையை பராமரிப்பதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியது. இந்தியாவுக்கும், பிரிட்டனுக்கும் இடையேயான நீடித்த நட்பின் அடையாளமான பென் நெவிஸ் சிகரத்தில் மூவர்ண கொடியுடன் ஏறியதில் பெருமை அடைவதாகவும் அண்ணாமலை கூறி உள்ளார்.