உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சர்ஜிக்கல் ஸ்டிரைக் பற்றி பிரதமர் மோடி கர்ஜனை Jammu Kashmir election| Modi

சர்ஜிக்கல் ஸ்டிரைக் பற்றி பிரதமர் மோடி கர்ஜனை Jammu Kashmir election| Modi

சர்ஜிக்கல் ஸ்டிரைக் பற்றி பிரதமர் மோடி கர்ஜனை Jammu Kashmir election| Modi| JK Election BJP| Congress| PDP| ஜம்மு - காஷ்மீரில் கடந்த 18, 25ம் தேதிகளில் 2 கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அக்டோபர் 1ம் தேதி மூன்றாம் கட்டதேர்தல் நடக்க உள்ளது. இதற்காக, ஜம்முவில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். ஜம்மு - காஷ்மீர் மக்கள் நலனில் காங்கிரஸ், பிடிபி, தேசிய மாநாட்டு கட்சிக்கு எப்போதும் அக்கறை இருந்ததில்லை. அவர்கள் காஷ்மீரின் வளர்ச்சியை விரும்பவில்லை. மூன்று கட்சிகளுமே குடும்ப ஆட்சியை மட்டுமே முன்னிலைப்படுத்தின. மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தி, பயங்கரவாதம், கலவர செயல்களுக்கு 3 கட்சிகளும் வழிவகுத்தன. ஜம்மு - காஷ்மீரில் தற்போது வரலாற்று சிறப்பு மிக்க தேர்தல் நடந்து வருகிறது. மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் ஓட்டுச்சாவடிகளில் கூடுவதை பார்க்க முடிகிறது. காங்கிரஸ் ஆட்சியில் எதிரிகளின் துப்பாக்கி குண்டுகளுக்கு பதிலடி கொடுக்கப்படவில்லை. மாறாக வெள்ளைக்கொடி காட்டப்பட்டது. இன்று செப்டம்பர் 28. 2016ம் ஆண்டு இதே நாளில் தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது. இது புதிய இந்தியா, எதிரிகளின் வீடு புகுந்து தாக்குதல் நடத்தும் வல்லமை படைத்தது இந்தியா என்பதை உலகுக்கு உணர்த்திய நாள். ஆனால், நம் ராணுவ வீரர்களின் செயலை காங்கிரஸ் இன்னமும் நம்ப மறுக்கிறது. சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்கு ஆதாரம் கேட்கின்றனர். அவர்கள் எப்போதும் நம் ராணுவத்தினரின் தியாகத்தையும், வீரத்தையும் மதித்தது கிடையாது. ராணுவத்தினரின் நலன் கருதி ஒன் ரேங்க், ஒன் பென்ஷனை நடைமுறைப்படுத்தியது பாஜ அரசு. ராணுவ வீரர்களின் நலனுக்கு முன் அரசின் கஜானா ஒரு பொருட்டே அல்ல. அது பற்றி நான் சிந்திக்கவும் மாட்டேன். ஜம்மு - காஷ்மீரில் அக்டோபர் 8ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும். அப்போது, பாஜ வெற்றி பெற்ற மகிழ்ச்சி செய்தி நமக்கு கிடைக்கும். வெற்றியைக் குறிக்கும் விஜயதசமி வருகிறது. ஜம்மு - காஷ்மீரில் பாஜ ஆட்சி அமைக்கும் நாள் வெகுதுாரத்தில் இல்லை என பிரதமர் மோடி கூறினார்.

செப் 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை