உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காஷ்மீர் விவகாரத்தில் ராகுலை வறுத்த அமித் ஷா Amit Shah| Haryana election| BJP| Modi| Rahul

காஷ்மீர் விவகாரத்தில் ராகுலை வறுத்த அமித் ஷா Amit Shah| Haryana election| BJP| Modi| Rahul

ஹரியானாவில் அக்டோபர் 5ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், குர்கானில் நடந்த பிரசார கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அனைவருக்குமான வளர்ச்சி சாத்தியப்படவில்லை. அவர்கள் அதைப் பற்றி கவலைப்படவும் இல்லை. 2014க்கு முன் ஹரியானாவில் இடைத்தரகர்கள் மற்றும் மாப்பிள்ளையின் ராஜ்ஜியம் நடந்தது. மத்தியில் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு பின், இடைத்தரகர்கள் காணாமல் போனார்கள். ஆனால், பொய் மூட்டைகளை அள்ளி விடும் மிஷின் போல் காங்கிரஸ் எம்பி ராகுல் பேசுகிறார். அக்னிவீர் திட்டத்தில் சேரும் இளைஞர்களுக்கு பென்ஷன் கிடைக்காது என்கிறார். நான் உறுதி அளிக்கிறேன். இன்னும் 5 ஆண்டுகளில் அக்னிவீர் திட்டத்தில் சேரும் அனைவருக்கும் பென்ஷன் கிடைக்க மத்திய அரசும், ஹரியானா மாநில அரசும் நடவடிக்கை எடுக்கும்.

செப் 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி