நோயாளி போல நடித்து டாக்டரை தீர்த்து கட்டிய சிறுவர்கள்
டில்லியில் ஜெய்த்பூர் Jaitpur பகுதியில் நிமா மருத்துவமனை உள்ளது. ஜாவேத் அக்தர் வயது 55 என்பவர் டாக்டராக பணியாற்றி வந்தார். நேற்று நள்ளிரவு இரு வாலிபர்கள் மரு்ததுவமனைக்கு வந்தனர். ஒருவன் கால் விரலில் காயத்துக்கு கட்டு போடப்பட்டிருந்தது. கட்டை பிரித்துவிட்டு புதிய கட்டு போட வேண்டும் என்றான். அவன் முந்தைய நாள் இரவுதான் காயத்துடன் வந்து சிகிச்சை பெற்றுச் சென்றான். அதனால் நர்ஸ் அவனுக்கு கட்டு போட்டு விட்டார். டாக்டரிடம் மருந்து எழுதி கேட்டு வாங்க வேண்டும் என இருவரும் கூறினர். டாக்டர் அக்தர் இருந்த கேபினுக்குள் சென்றனர். ஓரிரு நிமிடங்களில் கேபினில் இருந்து துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. நர்ஸ்கள், ஊழியர்கள் ஓடிப் போய் பார்த்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் டாக்டர் அக்தர் இறந்து கிடந்தார்.