/ தினமலர் டிவி
/ பொது
/ சென்னையில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் | Chennai Thiruvotriyur| street light projects | boomi pooja
சென்னையில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் | Chennai Thiruvotriyur| street light projects | boomi pooja
சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் 7-வது வார்டில் கார்கில் நகர், கார்கில் வெற்றி நகர் முதலான இடங்களில் 142 தெருவிளக்குகள் ரூ.52 லட்சம் செலவில் அமைக்கப்பட உள்ளன. இந்த பணிகளுக்கு திமுக சார்பிலும் அதிமுக சார்பிலும் பூமி பூஜை நடைபெற்றது. கே.சி.பி. ரோடு சாலையில் 7-வது வார்டு அதிமுக கவுன்சிலர் கார்த்திக், பூமி பூஜை நடத்தி இனிப்பு வழங்கி பணிகளை துவக்கி வைத்தார். இதே போல கார்கில் நகரில், திருவொற்றியூர் திமுக எம்.எல்.ஏ. சங்கர் தெருவிளக்கு அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடத்தினார். ஒரே வேலைக்கு 2 கட்சிகளைச் சேர்ந்தவர்களும் போட்டி போட்டு பூமி பூஜை நடத்தியதை பார்த்து அந்தப் பகுதி மக்கள் கிண்டலாக பேசிக் கொண்டனர்.
அக் 05, 2024