உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 12 வரை காத்திருக்கு மழை 15 மாவட்ட மக்கள் உஷார்! | Rain | Chennai IMD | Rain Alert | Weather

12 வரை காத்திருக்கு மழை 15 மாவட்ட மக்கள் உஷார்! | Rain | Chennai IMD | Rain Alert | Weather

12 வரை காத்திருக்கு மழை 15 மாவட்ட மக்கள் உஷார்! | Rain | Chennai IMD | Rain Alert | Weather வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்காலிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி உட்பட 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே போல் நாளை மறுநாள் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் உட்பட 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. 12ம் தேதி வரை இந்த மழை தொடரலாம் எனவும் சென்னை வானிலை மையம் கூறி உள்ளது. தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இன்றும் நாளையும் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

அக் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி