அரசியல் பீவரை எகிற வைத்த ஹரியானா ரிசல்ட் | Haryana Election | Bjp Leading | Congress
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹரியானா, ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகிறது காலை 8 மணிக்கு 2 மாநிலங்களிலும் ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. ஆரம்பம் முதல் ஹரியானாவில் பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகித்தது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளிலும் காங்கிரசுக்கு வெற்றி என கூறப்பட்டு இருந்தது. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாட ஆரம்பித்தனர். 50 முதல் 55 தொகுதிகளை கடந்து காங்கிரஸ் முன்னிலை வகித்தது. பாஜ 20 முதல் 25 தொகுதிகள் வரை முன்னிலையில் நீடித்தது. மெஜாரிட்டி பெற 46 இடங்களில் வெற்றி தேவை. 10 மணியை நெருங்கிய போது பாஜ முன்னிலையை நோக்கி ராக்கெட் வேகத்தில் முன்னேறியது. முன்னிலையில் இருந்த காங்கிரஸ் பின்னடைவாக 38க்கும் கீழான தொகுதிகளில் முன்னிலைக்கு சென்றது. கிட்டத்தட்ட 38 தொகுதிகளில் இவ்விரு கட்சிகள் இடையே வெறும் 500 ஓட்டுகள் வித்தியாசம் இருப்பது தான் நிலைமை மாற காரணம். காங்கிரசுக்கு தான் வெற்றி என கருத்துக்கணிப்புகள் கூறிய நிலையில் தேர்தல் முடிவுகள் அதை பொய்யாக்கலாம் என அரசியல் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.