திறந்து ஐந்தே நாட்களில் கோளாறான சம்பவம் | Kalaignar Centenary Park | Chennai | zipline ride
திறந்து ஐந்தே நாட்களில் கோளாறான சம்பவம் | Kalaignar Centenary Park | Chennai | zipline ride சென்னை அண்ணா சாலையில் 46 கோடி செலவில் அமைக்கப்பட்ட கருணாநிதி நூற்றாண்டு பூங்காவை முதல்வர் ஸ்டாலின் 7ம் தேதி திறந்து வைத்தார். ஜிப்லைன் பயணம், கண்ணாடி மாளிகை, ஆர்க்கிட் குடில் என பல அம்சங்களுடன் அமைந்துள்ளது. இந்த சூழலில் இன்று ஜிப்லைன் பயணத்தின் போது தொழில்நுட்ப கோளாரால் பாதி வழியில் நின்றது. அதில் இருந்த இரண்டு பெண்கள் பயத்தில் அலறினர். 20 நிமிடம் கடந்தும் நிலைமை சரி ஆகாததால் கயிறு கட்டி இழுத்து இரண்டு பெண்களையும் பத்திரமாக மீட்டனர். திறந்து 5 நாட்களே ஆன நிலையில் ஜிப்லைன் பழுதாகி உள்ளது. மக்களின் பாதுகாப்பில் விளையாட வேண்டாம் என டூரிஸ்ட்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.