உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போதிய பயணிகள் இல்லாததால் 8 விமானம் ரத்து Chennai International Airport

போதிய பயணிகள் இல்லாததால் 8 விமானம் ரத்து Chennai International Airport

போதிய பயணிகள் இல்லாததால் 8 விமானம் ரத்து Chennai International Airport 8 flights cancelled Airports Authority Of India சென்னையில் கனமழை காரணமாக விமான பயணத்தை மக்கள் தவிர்த்துவிட்டனர். சென்னை விமான நிலையம் இன்று காலை வெறிச்சோடி இருந்தது. போதிய பயணிகள் இல்லாத காரணத்தால், 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ரத்து செய்யப்பட்ட விமானங்கள் விவரம் வருமாறு: பெங்களூருவில் இருந்து இன்று காலை 7.05 மணிக்கு, சென்னைக்கு வர வேண்டிய ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானம், பகல் ஒரு மணிக்கு அந்தமானிலிருந்து வரவேண்டிய ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானம், பிற்பகல் 3.20 மணிக்கு டில்லியில் இருந்து வர வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ரத்து செய்யப்பட்டது. இன்று அதிகாலை மஸ்கட்டில் இருந்து சென்னை வர வேண்டிய ஓமன் ஏர்லைன்ஸ் விமானமும் ரத்தானது. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 4 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. இன்று காலை 7.45 மணிக்கு அந்தமான் புறப்படவிருந்த ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானம், காலை 8.40 மணிக்கு மஸ்கட் புறப்பட இருந்த ஓமன் ஏர்லைன்ஸ் விமானம், பிற்பகல் 1.40 மணிக்கு பெங்களூரு செல்ல வேண்டிய ஆகாஷா விமானம் ஆகியவை போதுமான பயணிகள் இல்லாத காரணத்தால் ரத்து செய்யப்பட்டது. இன்று மாலை சென்னையில் இருந்து டில்லி செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மற்ற விமானங்கள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன. ஆனாலும் விமானம் புறப்படும், வந்தடையும் நேரங்களில் மாற்றங்கள் இருக்கலாம்; பயணிகள் முன்கூட்டியே விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு, விமானம் புறப்படும் நேரத்தை கேட்டறியலாம். அதன்மூலம் சிரமத்தை தவிர்க்கலாம் என பயணிகளை சென்னை விமான நிலைய நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

அக் 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை