உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வங்க கடலில் உருவாகிறது முதல் புயல்! | cyclonic storm | cyclonic circulation | Rain | IMD

வங்க கடலில் உருவாகிறது முதல் புயல்! | cyclonic storm | cyclonic circulation | Rain | IMD

வங்க கடலில் உருவாகிறது முதல் புயல்! | cyclonic storm | cyclonic circulation | Rain | IMD வடகிழக்கு பருவ மழை துவங்கி உள்ள நிலையில் வங்க கடலில் முதல் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை; வடக்கு அந்தமான் கடற்பகுதியில் நேற்று உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது. இதன் தாக்கத்தால் அடுத்த 24 மணி நேரத்தில் கிழக்கு மத்திய வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு -வடமேற்கு திசையில் தொடர்ந்து நகரும். 22ம் தேதி காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தொடர்ந்து 23ம் தேதி கிழக்கு மத்திய வங்கக்கடலில் புயலாக மாறவும் வாய்ப்புள்ளது. இந்த புயல் தமிழகத்துக்கு வருமா என்ற கேள்விக்கும் இந்திய வானிலை பதில் அளித்துள்ளது. புயல், தமிழக கடற்கரை பகுதிகளை விட்டுவிலகி, ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தை நோக்கி நகரும். வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒடிசா - மேற்கு வங்கம் இடையே 24ம் தேதி காலைக்குள் கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரித்து உள்ளது. புதிதாக உருவாக உள்ள இந்த புயலுக்கு கத்தார் நாட்டின் பரிந்துரைப்படி டானா என பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

அக் 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ