பிரிக்ஸ் மாநாடு முடிந்து நாடு திரும்பினார் பிரதமர் pm modi| modi returns|brics| russia trip
பிரிக்ஸ் மாநாடு முடிந்து நாடு திரும்பினார் பிரதமர் pm modi| modi returns|brics| russia trip ரஷ்யாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நாடு திரும்பினார். கசானில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாடு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக மோடி தெரிவித்துள்ளார். பல்வேறு பிரச்சனைகளை விவாதிக்கவும், உலக தலைவர்களை சந்திக்கவும் வாய்ப்பு கிடைத்தது. ஜனாதிபதி புடின், ரஷ்ய மக்கள் மற்றும் அரசின் விருந்தோம்பலுக்கு நன்றி என மோடி கூறியுள்ளார். பிரிக்ஸ் மாநாடு ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்றது. இதில் பங்கேற்க கடந்த 21-ம் தேதி பிரதமர் மோடி ரஷ்யா சென்றார். ரஷ்ய அதிபர் புடின், ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். நேற்று சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை சந்தித்து பேசினார். 5 ஆண்டுகளுக்கு பின் இரு தலைவர்களும் சந்தித்து பேசியுள்ளனர். எல்லையில் ராணுவம் ரோந்து செல்வது தொடர்பாக இந்தியாவுக்கும், சீனாவுக்கும் உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்தது. பின்னர் நடந்த முக்கிய கூட்டங்களில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி ரஷ்ய பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார்.