உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உத்தவ் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு

உத்தவ் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு

மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா, பாஜ, தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மஹாயுதி கூட்டணி ஆட்சியில் உள்ளது. 288 தொகுதிகள் உள்ள மகாராஷ்டிரா சட்டசபைக்கு நவம்பர் 20ல் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் மஹாயுதி கூட்டணிக்கும், எதிர்க்கட்சியான, உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய, மஹா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே ஆட்சியை கைப்பற்றுவதில் பலத்த போட்டி நிலவுகிறது. மஹா விகாஸ் அகாடி கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவுக்கு வந்துள்ளது. சிவசேனா, காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தலா 85 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளன.

அக் 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை