ஒருவரை ஒருவர் குறை சொல்லும் திமுக, அதிமுக mk stalin| cauvery| admk| dmk
ஒருவரை ஒருவர் குறை சொல்லும் திமுக, அதிமுக mk stalin| cauvery| admk| dmk காவிரி -குண்டாறு திட்டத்தை திமுக முடக்கி வருவதாக அதிமுக குற்றம் சாட்டி வரும் நிலையில், அதிமுக ஆட்சியில்தான் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார். காவிரி - வைகை - குண்டாறு வெள்ள நீர் இணைப்பு கால்வாய் திட்டமானது, வெள்ளக்காலங்களில் காவிரியில் வரும் உபரி நீரை, கரூர், மாயனுார் கட்டளை கதவணையில் இருந்து, 262 கி.மீ., நீளத்துக்கு கால்வாய் அமைத்து, காவிரி ஆற்றை, அக்னியாறு, தெற்கு வெள்ளாறு, மணிமுத்தாறு, வைகை மற்றும் குண்டாறு ஆறுகளுடன் இணைக்கும் திட்டமாகும். இதன் மூலம், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்கள் பயன்பெறும்.
அக் 30, 2024