5ம் முறை குண்டு மிரட்டல் துப்பு இன்றி போலீஸ் திணறல் 5 schools bomb threat trichy
5ம் முறை குண்டு மிரட்டல் துப்பு இன்றி போலீஸ் திணறல் 5 schools bomb threat trichy cyber crime police No lead chennai cyber crime schools leave parents திருச்சியில் உள்ள 5 பள்ளிகளுக்கு இன்று இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. தென்னூரில் உள்ள மகாத்மா காந்தி நூற்றாண்டு நினைவுப்பள்ளி மற்றும் ராஜாஜி வித்யாலயா, கருமண்டபத்தில் உள்ள ராஜம் கிருஷ்ணமூர்த்தி மேல்நிலைப்பள்ளி, திருச்சி தெப்பக்குளத்திலுள்ள ஹோலி கிராஸ் மேனிலைப்பள்ளி, கீழ தேவதானத்திலுள்ள சந்தானம் வித்யாலயா ஆகிய 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக பள்ளி நிர்வாகத்தினர் இன்று காலை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உங்கள் பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது இன்றே வெடித்துச் சிதறும் என மெயிலில் குறிப்பிடப்பட்டிருந்தது. போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் 5 பள்ளிகளிலும் தீவிரமாக சோதனை நடத்தினர். ஆனால், குண்டு எதுவும் சிக்கவில்லை. மிரட்டல் விடுத்தது யார்?என இமெயில் முகவரி அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து தென்னூர் மகாத்மா காந்தி மேல்நிலைப்பள்ளி மற்றும் ராஜாஜி வித்யாலயா ஆகிய இரு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது. பள்ளிகளுக்கு பிள்கைளை அழைத்து வந்த பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து அவசர அவசரமாக வீட்டுக்கு திரும்பினர். கடந்த மாதம் திருச்சியில் 3, 4, 13, 23 ஆகிய தேதிகளில் மொத்தம்,10 பள்ளிகள், 5 கல்லூரிகள் மற்றும் 3 ஓட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. மிரட்டல் விடுத்த நபர்களை கண்டறிய முடியாமல் திருச்சி சைபர் கிரைம் போலீசார் திணறி வரும் நிலையில், 5வது முறையாக இன்று மிரட்டல் வந்துள்ளது. இதனால் சென்னை சைபர் கிரைம் போலீசாருக்கு இமெயில் முகவரிகளை திருச்சி போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். திருச்சி பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தபோதும், போலீஸ் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த மிரட்டல்கள் போலீசுக்கும் பள்ளி நிர்வாகங்களுக்கும் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. சந்தானம் வித்யாலயா ஆரு்எஸ்எஸ்முகாம் நடக்கிறது. மோகன் பாவகத் வந்தார். தகர்ப்போம் என கடிதம் வந்தது.