உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டிரம்பின் மாஸ் Come Back: மரண பீதியில் உறைந்துள்ள நாடுகள் | Donald Trump | U S President | Modi

டிரம்பின் மாஸ் Come Back: மரண பீதியில் உறைந்துள்ள நாடுகள் | Donald Trump | U S President | Modi

டிரம்பின் மாஸ் Come Back: மரண பீதியில் உறைந்துள்ள நாடுகள் | Donald Trump | U S President | Modi அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு டிரம்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், என் நண்பர் டிரம்பின் அமோக வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தேன். தொழில்நுட்பம், ராணுவம், எரிசக்தி, விண்வெளி உட்பட பல துறைகளில் இந்தியா- அமெரிக்கா உறவுகளை வலுப்படுத்த மீண்டும் இணைந்து பணியாற்றுவோம் என மோடி கூறினார். மோடி வாழ்த்து சொன்னதுமே வெற்றி களிப்பில் இருந்த டிரம்புக்கு கூடுதல் மகிழ்ச்சி. நான் வெற்றி பெற்ற பின் என்னை அழைத்து வாழ்த்து தெரிவித்த முதல் உலக தலைவர் மோடி. ஒட்டுமொத்த உலகமும் மோடியை நேசிக்கிறது. இந்தியா ஒரு அற்புதமான நாடு. பிரதமர் மோடி அற்புதமான மனிதர். மோடியும், இந்தியாவும் எனது உண்மையான நண்பர்கள் என டிரம்ப் கூறியுள்ளார். இதனால் இந்தியா அமெரிக்கா இடையிலான உறவுவில் கூடுதல் பலம் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபரானது பல நாடுகளுக்கு கிலியை உண்டாக்கி உள்ளது. குறிப்பாக சீனாவுக்கு எதிரான மனநிலை உள்ளவர் டிரம்ப். கோவிட் காலத்தில் அதை சீனா தான் பரப்பியது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதை தவிர தொழில், வர்த்தகம் போன்றவற்றிலும், இரு நாடுகளுக்கும் இடையே போட்டி உள்ளது. மேற்காசிய நாடான ஈரான் உடனான அணு ஒப்பந்தத்தை ரத்து செய்தவர் டிரம்ப். இதைத் தொடர்ந்து ஈரான் மீது பொருளாதார தடையையும் விதித்தார். இப்போது மேற்காசியாவில் போர் நடந்து வரும் நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் டிரம்ப் ஈடுபடுவார் என்கிற எதிர்பார்ப்பும் உள்ளது. உலகின் வல்லரசு யார் என்ற போட்டி உள்ளதால் ரஷ்யாவுக்கு எதிரான கொள்கைகளை உடையவர் டிரம்ப். தற்போது உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் அவருடைய நிலைப்பாடு எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதவிர வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் இருந்து தான் அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைகின்றனர். அதனால் எல்லையில், மிகப் பெரிய தடுப்புச் சுவரைக் கட்டியவர் டிரம்ப். அதுபோல பல நாடுகளில் இருந்து அகதிகள் வருவதையும் அவர் விரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நவ 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை